பட்டர் (வெண்ணை )முறுக்கு.
தேவையான பொருட்கள் -
2 கப் பதப்படுத்தின பச்சரிசி மாவு,1/2 கப் பொட்டுகடலை மாவு,
1/2 கப் கடலை மாவு,1 டேபிள்ஸ்பூன் வெண்ணை,1ஸ்பூன்சீரகம்,
1/2 ஸ்பூன் ஓமம்,1ஸ்பூன் வெள்ள எள்ளு,1/2 டீஸ்பூன் பெருங்காயம்,
தேவைக்கு உப்பு,எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை –
முதலில் பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை, கடலைமாவை சலித்து சேர்த்து சீரகம், ஓமம், உப்பு வெண்ணை சேர்த்து நன்கு கலந்து விட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சம் தண்ணி விட்டு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டவ்வில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி ,நன்கு காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து ,இடியாப்பம் நாழியில் ஒற்றை ஸ்டார் அச்சு போட்டு மாவை வைத்து எண்ணையில் பிழிந்து விடவும்.
1 நிமிடம் கழித்து திருப்பி விட்டு, நன்கு வெந்து ,சொற சொறப்பு நின்றதும், எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
நன்கு வெண்ணை வாசமுடன், மொறு மொறுப்பான காரம் எதுவும் இல்லாமல் குட்டி"கண்ணனு"க்கு பிடித்த பட்டர் முறுக்கு தயார். பூஜைக்கு செய்து செய்து பார்த்து சுவைக்கவும்.
0
Leave a Reply