25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


திருவில்லிபுத்தூர் நகராட்சியில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் (26.05.2026) கோடைகாலத்தில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் குறித்துத் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குடிநீர் விநியோக அட்டவணை மற்றும் அறிவுரைகள்:

          திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டு பொதுமக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும், ஒரு வார காலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை (Schedule) உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.மேலும், வால்வு இயக்குபவர்கள் (Valve Operators) எவ்விதப் புகார்களுக்கு இடமளிக்காத வகையில், உரிய முறையில் குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை மற்றும் கடுமையான எச்சரிக்கை:

          பொதுமக்களுக்கு எவ்விதக் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். குடிநீர் வழங்கல் பணியில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்தார்.இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர், பொறியாளர், நகராட்சிப் பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News