25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வறட்டு இருமல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வறட்டு இருமல்

மாறிவரும் பருவநிலையால் அடிக்கடி சளி, இருமல் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ளலாம். 

தேனி ல் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் எரிச்சலை குறைக்கின்றன. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் தேன் கலந்து குடிப்பது இருமல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் தரும்.

மஞ்சளில் உள்ள குர்க்குமின் எனும் வேதிப்பொருள் இருமலை குணப்படுத்த உதவுகிறது. வரட்டு இருமலை போக்க பாலுடன் சிறிதளவு மஞ்சள் பொடி, மிளகு பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

வறட்டு இருமலால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை போக்க உப்பு தண்ணீரால் வாய் கொப்பளிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலியும் குணமாகும்.

வெந்நீர், சூப், மூலிகை டீ போன்ற சூடான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இது எரிச்சலைப் போக்கி தொண்டைக்கு இதமான உணர்வை கொடுக்கும்.இஞ்சியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியை குறைக்க உதவுகின்றன.

வீட்டு வைத்தியங்கள் இருமலுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.. இருமல் மோசமாவதை தடுக்க மருத்துவரின் ஆலோசனையையும் பெறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News