25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சூலை 18   தமிழ்நாடுநாள்  விழாவை   முன்னிட்டு  பள்ளி  மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்  நடைபெற உள்ளது  என  மாவட்ட  ஆட்சித் தலைவர்   அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூலை 18   தமிழ்நாடுநாள் விழாவை  முன்னிட்டு  பள்ளி  மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது  என  மாவட்ட  ஆட்சித் தலைவர்   அவர்கள் தகவல்.

தமிழ்  வளர்ச்சித்  துறையால் “தனித்துவத்  தமிழ்நாடு  எனப்பெயர்  சூட்டப்பட்ட 18.07.1967ஆம்நாளினை பெருமைப்படுத்திடும் வகையில்  ஆண்டுதோறும்  சூலை 18ஆம் நாள்  “தமிழ்நாடுநாள்  விழாவாக”  மிகச்  சிறப்பாகக்  கொண்டாடப்பட்டு  வருகிறது.

 தமிழ்நாடுநாளை  நினைவுகூரும்  வகையில்  விருதுநகர்  மாவட்டத்தில்  உள்ள அனைத்து  வகையான  பள்ளிகளிலும்  6ஆம் வகுப்பு முதல் 12ஆம்  வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்குக்  கட்டுரை  மற்றும்  பேச்சுப்போட்டிகள் 14.07.2026 அன்று   விருதுநகர் கே.வி.எஸ்.  ஆண்கள்  நடுநிலைப்பள்ளியில்  (விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில்) நடத்தப்பெறும். 

 பள்ளி  மாணவர்களுக்கானக்  கட்டுரை   பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்று வெற்றிபெறும்  மாணவர்களுக்கு  மாவட்ட  அளவில்  முதல் பரிசாக ரூ.10,000 -மும்  இரண்டாம் பரிசாக  ரூ.7000 -மும்  மூன்றாம் பரிசாக ரூ.5000 -மும்  மற்றும் பாராட்டுச்சான்றிதழ்  வழங்கப்பெறும்.

  தமிழ்நாடு நாள்  விழாவை  முன்னிட்டு  மாவட்ட   அளவில்  வெற்றி  பெற்று   மாநில  அளவிலான  கட்டுரை   பேச்சுப்போட்டியில்   வெற்றி பெறும்   மாணவர்களுக்கு  முதல் பரிசாக ரூ.50,000 -மும்,  இரண்டாம் பரிசாக ரூ.30,000 -மும்,  மூன்றாம் பரிசாக ரூ.20,000 -மும், மற்றும்  பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெறும். முதன்மைக்  கல்வி  அலுவலரால்  அளிக்கப்பெறும்  பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள்  மட்டுமே  போட்டிகளுக்கு  அனுமதிக்கப்படுவார்கள்.  

             கட்டுரைப்  போட்டி   தமிழ்நாடு  நாள்  கருவானது  முதல்  உருவானது  வரை  என்ற   தலைப்பிலும் ,    பேச்சுப் போட்டி   1.நான் விரும்பும்  தமிழ்நாடு   2.அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய   நவீன  தமிழ்நாடு  3.இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு  4.கல்வியில் சிறந்த தமிழ்நாடு  5. வீரம் செறிந்த  தமிழ்நாடு  என்ற  ஐந்து தலைப்புகளில்  போட்டி நாளன்று  மாணவர்கள்  குலுக்கல்  முறையில்  தேர்ந்தெடுக்கும்  ஏதேனும்   ஒரு   தலைப்பின்கீழ்   பேசவேண்டும்.  மேலும் போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு  தமிழ்வளர்ச்சி   உதவி இயக்குநர்  மாவட்டஆட்சியர்  அலுவலக வளாகம்  விருதுநகர் என்ற  முகவரியிலோ  அல்லது  செல்பேசி  8778878443 / 8608953287 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

 விருதுநகர்  மாவட்டத்தில்  உள்ள  பள்ளிகளில்  பயிலும்   மாணவ  மாணவிகள் இப்போட்டிகளில்  பங்கேற்று  பயன்பெறுமாறு   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., தெரிவித்துள்ளார்.                           

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News