25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்கள் திட்டத்தில்  சேர்ந்து பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்கள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டின் மாநில மரமும் தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் இயைந்துள்ளதுமான பனை மரம், நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பினை தடுத்தும், மண்ணை  உறுதிப்படுத்தி வளப்படுத்தியும் மண்ணிற்குகந்த மரமாக விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்திட்டத்தில் ரூ.6.30/-இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பனை மரத்தின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறும் வகையில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலம் 40,000 பனை விதைகள் விநியோகம் செய்ய ரூ.1.20/-இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள்/ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.மேலும் 600 பனங்கன்றுகள் விநியோகம் செய்ய ரூ.60,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 15 பனங்கன்றுகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள்/ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 30 பனங்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பனை சாகுபடி அல்லது பனை சார்ந்த தொழில் செய்யும் விவசாயிகளில் தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளை பனை சாந்த சிறு தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்கும் பொருட்டு 160 சதுர அடியில் நிரந்தர மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு அதிகபட்சமாக ரூ.50,000/- வீதம் 9 அலகிற்கு ரூ.4.50/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் பயன்பெற https://tnhorticulture.tn.gov.in  என்ற இணையதளத்திலோ, உழவன் செயலியில் பதிவு செய்தோ  அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.     

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News