25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பூண்டு கார முறுக்கு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூண்டு கார முறுக்கு.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்,
பொட்டுக்கடலை மாவு (வறுத்த பொட்டுக்கடலை) - 1/4 கப்,
பூண்டு - 10-12 பற்கள்,
தனி மிளகாய் தூள் - 1 முதல் 1.5 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப),

வெண்ணெய் / சூடான எண்ணெய் - 1-2 மேசைக்கரண்டி,
சீரகம் / எள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,


செய்முறை:
பூண்டு பற்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துஅந்த விழுதை வடிகட்டி பூண்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுபொட்டுக்கடலை மாவுமிளகாய் தூள்சீரகம்உப்புவெண்ணெய் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துமுறுக்கு மாவு பதத்திற்கு (மென்மையாகஅதே சமயம் கையில் ஒட்டாமல்) பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு அச்சில் (விருப்பமான அச்சு) மாவை போட்டுசூடான எண்ணெயில் வட்ட வடிவில் அல்லது சிறியபூண்டு முறுக்குகளாக பிழிந்து விடவும்.மிதமான தீயில் வைத்துமுறுக்கின் சலசலப்பு சத்தம் அடங்கும் வரை இருபுறமும் திருப்பி பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும். 
பூண்டு விழுதை நேரடியாக சேர்த்தால் முறுக்கு பிழியும் அச்சு அடைத்துக் கொள்ளும்.எனவே சாறு பிழிந்து பயன்படுத்துவது சிறந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News