25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க உத வும் குளுக்கோஸ் திரவத்திற்கு இணையாக இளநீர் கருதப்படுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க உத வும் குளுக்கோஸ் திரவத்திற்கு இணையாக இளநீர் கருதப்படுகிறது.

இளநீர் குடிப்பதால் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் அகற்றப்படுகின்றன. உடலில் இன்சுலினை அதிகரிக்க இளநீர் உதவுகிறது. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்ப டுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் சோர்வை குறைக்கிறது. உடலின் வறட்சியை நீக்கி சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.

இயற்கையில் உருவான தென்னையின் இளநீர் போல் மனிதனுக்கு சக்தியை தரும் ஒரு ஊட்டச்சத்து நீர் வேறு எதுவும் இல்லை. அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க உத வும் குளுக்கோஸ் திரவத்திற்கு இணையாக இளநீர் கருதப்படுகிறது.

இளநீரில் கார்போஹைட்ரேட் 3.8 கிராம், சர்க்கரை 2.5 கிராம், நார்ச்சத்து 1 கிராம். புரதம் 0.7 கிராம், கொழுப்பு 0.2 கிராம், பொட் டாசியம் 250 மி.கி., சோடியம் 105 மி.கி., வைட்டமின் பி6, சி மற்றும் டி போன்ற பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கால்சியம், மெக்னீசியம், கோபாலமின் போன்ற தாதுக் களும் நிறைந்துள்ளன.

கோடையில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் உரிந்து விழும் சருமத்தை தவிர்க்கிறது. மலச்சிக்கல், அஜீரணம், வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை இளநீர் நீக்கும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் இயற்கை நொதிகளை கொண்டுள்ளது 

உயர்ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இளநீர் பருகினால் ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். எனினும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இளநீரை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகமாக குறைத்து, நோய் பாதிப்புகளை அதிகப்படுத்தி விடக்கூடும் என கூறப்படுகிறது. பொதுவாக, இளநீரை சூரிய உதயத்திற்கு பிறகு காலை 11 மணிக்கு மேல் குடிப்பது நல்லது என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News