வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடும் வெப்பம் காரணமாக கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கரும்புச்சாறு, இளநீர், சர்பத், பதனீர், மோர் உள்ளிட்ட குளிர்ச்சியான பானங்களை பொதுமக்கள் அதிகளவில் நாடி வருகின்றனர்.
கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், இளநீரின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த செவ்விளநீர் தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.40-க்கு விற்கப்பட்ட பச்சை இளநீர் தற்போது ரூ.80 வரை விலை உயர்ந்துள்ளது.
இளநீரின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும், கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து இளநீரை வாங்கிச் செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால், இளநீரின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
0
Leave a Reply