விருதுநகர் மாவட்டத்தில், நான்கு வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, நடைபெற்ற 2025-2026 -ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.
அதன் படி, நடைபெற்ற 2025-2026 -ஆண்டிற்கான தொல்லியல் துறை மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மறையூர் சத்திரம், இராஜபாளையம் வட்டம், மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம் மற்றும் புடைப்புச் சிற்பங்கள், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்திலுள்ள நாயக்கர் கால மண்டபம், மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம் பிள்ளையார் நத்தம் மண்டபம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.
0
Leave a Reply