25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி22 - ல்  நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அரசியல் தலைவர்கள், சினிமா விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட 7000 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
திறப்புவிழா அன்று 33 சிசேரியன்

ராமர் கோயிலின் கும்பாபிஷேக தினத்தில் சிசேரியன்மூலம் குழந்தையை பெற்றெடுக்க 33 தாய்மார்கள் பதிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனை தகவல். 

திருப்பதியில் இருந்து ஒரு லட்சம் லட்டுகள்

கும்பாபிஷேகத்தன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க திருப்பதி தேவஸ்தான கோயிலில் இருந்து ஒரு லட்சம் ஸ்ரீவாரி லட்டுகள் அயோத்திக்கு அனுப்பப்படுகிறது. ஒரு லட்டுவின் எடை 25 கிராம்.

14000 கோயிலில் நேரலை  

ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதிலும் உள்ள 14 ஆயிரம் கோயில்களில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது மேலும் சுமார் 1.05 கைதிகள் காணவும் சிறைச்சாலையில் ஏற்பாடு.

1001 பேருக்கு 'ஸ்ரீராம்' டாட்டு

நாக்பூரைச் சேர்ந்த டாட்டு கலைஞர் ஒருவர் ராமர் கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு 'ஸ்ரீ ராம்' என்ற டாட்டுவை கையில் போட்டுவருகிறார். 1001 பக்தர்களுக்கு இலவசமாக போட திட்டமிட்டுள்ளார்.  

2,400 கிலோ எடையில் ராட்சத மணி

உத்தரப்பிரதேசத்தின் சல்சர் என்ற இடத்தில் எட்டு உலோகங்களைக் கொண்டு 2,400 கிலோ எடையில் ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒலித்தால் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கும்.

பார்வையற்ற இஸ்லாமியருக்கு அழைப்பு

ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்றவரான அக்பர்தாஜ் என்பவருக்கு சிறப்பு அழைப்பு சிறுவயதில் இருந்து ராமர் மீது பக்திக் கவிதைகள் எழுதி வருகிறார்.

5 அடியில் மணிவிளக்கு 

ராமர் கோயில் திறப்பு விழாவின் போது வாரணாசிவாசிகள் விளக்கேற்றும் வகையில் 5 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட மண் விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. விளக்கேற்ற 101 கிலோ நெய் பயன்படுத்தப்படவுள்ளது.

7000 கிலோ அல்வா

நாக்பூரைச் சேர்ந்த விஷ்ணு என்ற சமையல் கலைஞர் 7000 கிலோ எடையில் அல்வா செய்ய இருக்கிறார். இதற்காக 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவும் 10 அடிநீளமும் கொண்ட கடாய் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 1400 கிலோ எடை கொண்ட கடாயை தூக்க க்ரேன் பயன்படுத்தப்பட்டது.

புடவையில் ராமர் கோயில்

அயோத்தி கோயிலின் படங்கள் அச்சிடப்பட்ட புடவை சூரத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பிரத்யேகமாக தயாரித்துள்ளார். இந்தப் புடவை கோயில் திறப்புவிழாவின் போது சீதா தாயாருக்கு வழங்கப்படுகிறது.

8 நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரம்.

லக்னோவைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஒருவர், ராமர் கோயிலில் வைப்பதற்காக கடிகாரத்தை வடிவமைத்துள்ளார். இந்த கடிகாரம் இந்தியா, ஐப்பான், ரஷ்யா, யுஏஇ, சீனா, சிங்கப்பூர், மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நேரத்தைக் காட்டும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News