25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில்  இந்திய அணி வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

மகளிர் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா!

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரைத் தொடங்கியது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 9-வது ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

லீக் சுற்றில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலையில் இருந்தன. ஆட்டத்தின் பிற்பாதியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி மேலும் 3 கோல்கள் அடித்து 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஆண்கள் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 100 ஆண்டுகால விளையாட்டு உறவைக் கொண்டாடும் வகையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட நட்புத் தொடரில் பங்கேற்கிறது.

இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து போராடிய நியூசிலாந்து அணிக்கு 55-வது நிமிடத்தில் சாம் ஹிகா ஒரு கோல் அடித்தார்.

இருப்பினும், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News