25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்  'சூப்பர் 100' அரையிறுதியில், இந்தியாவின் துஷார் சுவீர், தான்வி சர்மா  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் 'சூப்பர் 100' அரையிறுதியில், இந்தியாவின் துஷார் சுவீர், தான்வி சர்மா  .

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்  'சூப்பர் 100' அசாமின் கவுகாத்தியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின்தான்வி சர்மா, சகவீராங்கனை தான்யாவை எதிர்கொண்டார். 

முதல் செட்டை தான்வி 21-17, இரண்டாவது செட்டை, 27-25 என தான்வி கைப்பற்றி,. முடிவில் தான்வி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

 இந்தியாவின் அனுபமா, மற்றொரு காலிறுதியில், 21-19, 6-21, 12-21 என, சக வீராங்கனை அஷ்மிதாவிடம் தோல்வி அடைந்தார். மற்ற காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் இஷாராணி, தஸ்னிம்மிர் தோல்வியடைந்தனர்.

 இந்தியாவின் துஷார் சுவீர், ஆண்கள்ஒற்றையர் காலிறுதியில் ,21-14, 21-11 என மலேசியாவின் முகமது யூசுப்பை வென்று,  அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் சங்கர், 15-21, 21-13, 22-20 என சகவீரர் சனீத் தயானந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தருண் 11-21, 18-21 என மலேசியாவின் டிரையான்ஷாவிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியா வின் சாய் பிரதீக்,புருத்வி  ஜோடி 22-20, 21-18  என மலேசியாவின் இஷெங், லிம் ஜியான் ஜோடியை வென்றது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News