100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மூத்த வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள விருட்சம் மகளிர் முதியோர் இல்லத்தில் இன்று(20.03.2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்களாகிய உங்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தற்போது வாக்களிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் மூத்த குடிமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை, பயன்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14,97,417 வாக்காளர்களில், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,018 வாக்காளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,304 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,019 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 809 வாக்காளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1,,089 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1432 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 1,134 வாக்காளர்களும் என மொத்தம் 7,805 மூத்த வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதன்படி, அனைத்து மூத்த வாக்காளர்களும் தங்களது தேர்தல் பங்கேற்பினைத் தொடர்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மறையான பங்களிப்பிற்கு முன்மாதிரியாக திகழும் இந்த மூத்த வாக்காளர்களை பெருமைப்படுத்தும் விதமாக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூத்த வாக்காளர்களுக்கு, ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
தொடர்ந்து, 100 சதவீதம் வாக்கினை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் நிலையான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, சமூகம் மொழி அல்லது எந்த தூண்டுதலாலும் பாதிக்கப்படாமல் வாக்களிக்கவும் இதன் மூலம் உறுதியளிக்கிறோம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மூத்த வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.திலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மூத்த வாக்காளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply