25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியா.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் மலேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சீனாவில், ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (20 வயதுக்குட்பட்டோர்) தொடரின் 10-வது சீசன் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது.

லீக் சுற்றில் பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என 10 புள்ளிகள் பெற்ற இந்தியா, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

நேற்று நடந்த அரையிறுதியில், ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

நாளை நடைபெற உள்ள பைனலில் இந்தியா, தென் கொரிய அணியை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News