25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் அல்காரஸ், சபலென்காவுக்கு …
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் அல்காரஸ், சபலென்காவுக்கு …

 'லாரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் ,ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.  ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று முன் தினம்  இரவு இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ,வெகுவிமரிசையாக நடந்தது. 

கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், அமெ ரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டங்களை வென்றவரும், உலக தரவரிசையில்,  2-வது இடத்தில்  இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சிறந்த வீரர் விருதையும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றிய ‘நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றனர்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற பாரீஸ் செயின்ட் ஜெர் மைன் (பிரான்ஸ்) சிறந்த அணி விருதை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News