25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் 01.02.2025 முதல் 14.02.2025 அன்று வரை நடைபெறவுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் 01.02.2025 முதல் 14.02.2025 அன்று வரை நடைபெறவுள்ளது

தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.  நமது மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 கோழிகள், பண்ணைக்கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகளை வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்குகிறது.  இந்நோயின் முக்கிய அறிகுறிகளாவது,  கோழிகள் தீவனம் உண்ணாமை, சோர்ந்து போய் இருத்தல், வெள்ளை நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுதல், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழிகள் நடக்க இயலாமல் போகும் ஆகியவை ஆகும். இந்நோய் ஏற்படின் கோழிகள் வளர்ப்போருக்கு அதிகளவில் பொருளாதார இழப்பு நேரிடும். மேலும் நோய் கண்ட கோழிகளை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது ஆகும்.  எனவே கோழிகள் வளர்ப்போர், கோழிப்பண்ணையாளர்கள் எட்டு வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இத்தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் இந்நோயினை முற்றிலும் அகற்றி விடலாம்.  

விருதுநகர் மாவட்டத்திற்கு இப்பணிக்கென 1.68 இலட்சம் டோஸ் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து 115 கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு இலவச கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை கால்நடை வளர்ப்போர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News