நம்ம அரசு, நம்ம கையில்: தமிழக அரசின் அதிரடி வாட்ஸ்அப் சேவை! முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.
1. நம்ம அரசு, நம்ம கையில்: தமிழக அரசின் அதிரடி வாட்ஸ்அப் சேவை! முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.
இனி இ-சேவை மையங்களுக்கு அலைந்து திரியத் தேவையில்லை. பொதுமக்கள் நேரடியாகச் சேவைகளைப் பெறும் வகையில், 'நம்ம அரசு நம்ம கையில்' என்ற புதிய வாட்ஸ்அப் வசதியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
எண்ணிக்கை: 20 துறைகளின் கீழ் வரும் 66 சேவைகளை இதன் மூலம் மிக எளிதாகப் பெறலாம்.
கிடைக்கும் சான்றிதழ்கள்: வருவாய், பிறப்பு, இறப்பு, சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை.
7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு 'வணக்கம்' அல்லது 'HI' என்று மெசேஜ் அனுப்பவும்.
தமிழில் சேவைகளைப் பெற 'T' என்றும், ஆங்கிலத்தில் பெற 'E' என்றும் பதிவிடவும்.
அதன் பின் தேவையான துறையைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
2. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (CM HEALTH CARD)
தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஒரு குடும்பத்திற்கு ₹5,00,000 வரை இலவச சிகிச்சை வழங்கும் திட்டம். "மக்களின் நலனே என் இலட்சியம்".
திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் முழுமையான மருத்துவப் பாதுகாப்பு.
அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் இதில் அடங்கும்.
பணம் செலவில்லாமல் தரமான சிகிச்சை பெறலாம்.
பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை (Ration Card)
வருமானச் சான்று (Income Certificate)
மொபைல் எண்
அடையாள ஆவணம் (ஆதார் அட்டை)
குறிப்பு: இப்போதே பதிவு செய்து உங்கள் குடும்பத்தின் மருத்துவ நலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
0
Leave a Reply