25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


100% வாக்குப்பதிவை வலியுறுத்தி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி "Our Vote Our Voice" - விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்ட விழிப்புணர்வு.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில் (26.03.2026) இளைய தலைமுறை வாக்காளர்களுக்கான பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் ஒன்றிணைந்து, "OUR VOTE OUR VOICE" (நமது வாக்கு நமது குரல்) என்ற தேர்தல் முழக்க வடிவில் மைதானத்தில் அணிவகுத்து நின்று, ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றினர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பின்வரும் தேர்தல் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.  "இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது நிலையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என உறுதி கூறுகிறோம்.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல் எங்களது வாக்கினைப் பதிவு செய்வோம்."

 வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்."வாக்களிப்பது நமது உரிமை", * "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "ஜனநாயக கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியப் பலகைகளை ஏந்தி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி போட்டிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் அரசுத் துறை உயர் அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News