25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


.உருளைக்கிழங்கு பட்டாணி குருமா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.உருளைக்கிழங்கு பட்டாணி குருமா.

தேவையான பொருட்கள்:
3டேபிள்ஸ்பூன்எண்ணெய் ,1ஸ்பூன் சோம்பு,2பிரிஞ்சி இலை,1 பெரிய வெங்காயம்,
1கொத்து கறிவேப்பிலை,2தக்காளி, 1-1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2டேபிள்ஸ்பூன் தயிர்,
1-1/2ஸ்பூன் மிளகாய் தூள்,1ஸ்பூன் தனியா தூள்,1ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்,
1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,1/4கப் உருளைக்கிழங்கு நறுக்கியது,3/4கப் நறுக்கிய கேரட், பீன்ஸ்,
காலிபிளவர்,1/4கப்பட்டாணி,1/2கப்தேங்காய்,2துண்டுபட்டை,5கிராம்பு,3ஏலக்காய்,சிறிதளவுகடல்
பாசி,10முந்திரி,தேவையான அளவு உப்பு, சிறிதளவுபுதினா.


செய்முறை :
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் ,அதில் சோம்பு ,பிரிஞ்சி இலை ,கருவேப்பிலை
தாளிக்கவும்.. அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

வெங்காயம் வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு
வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் பொடிகளையும் சேர்த்து நன்றாக
வதக்கவும்.
பொடிகள் எல்லாம் நன்றாக வதங்கியதும் ,அதனுடன் தயிரையும் சேர்த்து வதக்கி
அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்..
மிக்ஸி ஜாரில் தேங்காய் பட்டை, கிராம்பு, ஏலக்காய் கடல்பாசி, முந்திரி சேர்த்து சிறிது
தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை நாம் வதக்கி
வைத்திருக்கும் காய்கறி உடன் சேர்க்கவும்..
அதனுடன் உப்பையும் சேர்த்து ,சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி இரண்டு விசில்
வைக்கவும்..
இறுதியாக குக்கரை திறந்த பிறகு அதில் சிறிது புதினா இலைகளை தூவி விடவும்..
இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார். இது சப்பாத்தி
பரோட்டா இதற்கெல்லாம் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
குறிப்பு : இந்த குருமா ஹோட்டல் சுவையில் இருக்கும் மிகவும் அருமையாக இருக்கும்
.இதில் கடல்பாசி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஓட்டல் சுவையில்
இருக்கும்.
இதில் முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலையும் சிறிது அளவு கசகசாவும் சேர்த்தும்
அரைக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News