25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இறால் பிரியாணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இறால் பிரியாணி.

தேவையான பொருட்கள் :- 
பாசுமதி அரிசி- 1 கிலோ,  இறால் -½கிலோ, 
வெங்காயம்- ½ கிலோ, தக்காளி-¼ கிலோ
இஞ்சி- 100 கிராம், பூண்டு-100 கிராம், 
பச்சை மிளகாய்-4, மிளகாய்ப் பொடி-50 கிராம், மஞ்சள் பொடி - 1 டேபிள்ஸ்பூன், 
கரம் மசாலா- 1 டேபிள் ஸ்பூன், 
கல் உப்பு, புதினா, , தேவையான அளவு, 
கொத்தமல்லி சிறிதளவு எண்ணெய்- 200 மி.லி.
செய்முறை:
இறாலைச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு இரண்டையும்
அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிவைத்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்றவைத்து, குக்கரில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதன் பிறகு வெங்காயம், தக்காளி போடவும். இவை வதங்கியதும் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி,
கரம் மசாலா போட்டு, அதனுடன் இறாலையும் போட்டு வதக்க வேண்டும்.
வதக்கியவை 'தொக்கு' பதத்துக்கு வந்ததும் ஒரு கப் பாசுமதி அரிசி, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு குக்கரை
மூடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவினால், சுவையான இறால் பிரியாணி
தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News