சிவப்பரிசி குழல் புட்டு
தேவையான பொருட்கள் :
சிவப்பரிசி - 2கப்,
தேங்காய் துருவல்- 1 1/2 கப்,
உப்புதேவைக்கு.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் புட்டு மாவு, அத்துடன் தேவையான உப்பு, சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகதண்ணி தெளித்து கட்டி இல்லாமல் மாவு உதிரியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்துவிடவும்.தேங்காயை துருவி வைத்துக்கவும். புட்டு பானையை ஸ்டவ்வில் வைத்து தண்ணி விட்டு சூடுபண்ணவும்.புட்டு குழலில் கொஞ்சம் தேங்காய் துருவல், அதற்க்கு மேல் அரிசி மாவு, என்று குழாய்முழுவதுமாக நிறைத்து புட்டு பானையில் 10நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான சிவப்பாரிசி குழாய் புட்டு தயார்..இந்த சுவைமிக்க புட்டை கடலை,பச்சை பயறு, தட்டை பயறு குருமாவுடன் பரிமாறவும்.இது ஒரு அருமையான காலைஉணவு.குழந்தைகள் சக்கரை, பழம் சேர்த்தும் சாப்பிடலாம்.
0
Leave a Reply