தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங்,இந்திய ஓபன் பாட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றார்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இந்திய ஓபன் சர்வதேச பேட் மிண்டன் போட்டியில்,நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சீன தைபே வீரர் லின் சுன்யி 21-10, 21-18 என்ற நேர் செட் டில் ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேசியா) வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
'நம்பர் ஒன்' வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தென்கொரியாவின் அன்சே யங் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் 43 நிமிடங்களில் சீனாவின் வாங்ஷியியை தோற்கடித்து மீண்டும் பட்டத்தை கைப்பற்றினார்.
கோப்பையை வென்ற இவருக்கும் தலா ரூ.60 லட்சம் பரிசுத் தொகையாக வழங் கப்பட்டது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில் இந்தியர்கள் யாரும் கால் இறுதியை தாண்டவில்லை..
0
Leave a Reply