25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம்

பதிவுத்துறைத் தலைவர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண். 51762/எல்3/2024, நாள் 18.12.2024-ன்படி, இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B(4), 47A(1) மற்றும் 47A(3)–ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

         எனவே, விருதுநகர் வருவாய் மாவட்டத்தில்  இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B (4), 47A(1) மற்றும்  47A(3)- ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை, சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்குண்டான குறைவு முத்திரைத் தீர்வையை விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இரண்டாம் தளத்தில் அறை எண்.  216-ல் இயங்கி வரும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News