விளையாட்டுச் செய்திகள் 7 th nov 2026
துப்பாக்கி சுடுதல்: கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
கால்பந்து: பெங்களூருவில் நடைபெற்ற இந்திய கால்பந்து லீக் போட்டியில் பெங்களூரு யுனைடெட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியை வீழ்த்தியது.
ரக்பி: ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்டோர்) வரும் நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு சர்வதேச ரக்பி போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply