25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்ரீதேவி வாங்கிய பிரம்மாண்டமான முதல் வீடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீதேவி வாங்கிய பிரம்மாண்டமான முதல் வீடு

நடிகை ஸ்ரீதேவி பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் பாலிவுட்டில் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் சென்னையில் அவருக்கென்று ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.ஸ்ரீதேவி மறைந்த பிறகு, அவர் வாழ்ந்த அந்த வீட்டை மீண்டும் புணரமைத்தார் போனி கபூர். முன்பை விட பிரம்மாண்டமாய் மாற்ற பட்ட இந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்து ஏர்பிஎன்பி என்ற தளத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகளான ஜான்வி .அம்மாவை போலவே ஜான்வி படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு, தற்போது பாலிவுட்டில் இருந்து தெலுங்கிற்கு நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஸ்ரீதேவி இங்கிருந்து பாலிவுட் வரை சென்று கலக்கினார். அவரது மகளான ஜான்வி பாலிவுட்டில் இருந்து தென்னிந்தியாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது.இந்த வீட்டை மீண்டும் பெரிய செலவில் புதுப்பித்துள்ளார்கள். வீட்டில் கலை பொருட்கள், ஓவியங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் போனி கபூர். இவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இவரின் சென்னை அலுவலகத்தையும் இங்கேயே வைத்துள்ளார்கள்.

இந்த வீட்டில் தங்க வருபவர்களுக்கு தென்னிந்திய உண்வுகள் பரிமாறப்படும். மேலும் ஆந்திர பிரியாணி முதல் தோசை வரை மெனுக்கள் வைத்துள்ளார்கள். மேலும் காலையில் அழகான கடற்கரை காட்சியுடன் யோகா பயிற்சியும் வழங்கப்படும் என ஜான்வி அந்த தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீட்டில், அழகான நீச்சல் குளம் மற்றும் சோபாக்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார்கள்.மேலும்வீட்டின்முன்புறம்பெரியதாமரையில்செயற்கையானநீர்வீழ்ச்சிஅமைத்துவருபவர்களைகவரும்வகையில்செய்துள்ளார்கள்.பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த இந்த வீடு இப்போது முழுவதும் தயாராகி உள்ளது. இந்த வீட்டில் தங்க குறிப்பிட்ட அளவில் மட்டுமேஅனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரம்மாண்ட வீடு சென்னை இ சி ஆரில் உள்ள அக்கரை என்ற இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News