25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


இந்தியாவுக்குள் நுழைய ஸ்டார்லிங்க் தீவிரம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவுக்குள் நுழைய ஸ்டார்லிங்க் தீவிரம்!

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் நுழைய ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோ நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் வழியாக நேரடி இணைய சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த சேவைகளை தொடங்க நீண்ட காலமாகவே எலான் மஸ்க் முயற்சித்து வருகிறார். எனினும் நேரடியாக ஸ்டார்லிங்க் சேவைகளை இந்தியாவில் தொடங்க முடியாத சூழலில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களோடு கைக்கோர்த்துள்ளது ஸ்டார்லிங்க்.

 முதலில் ஏர்டெல்லுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் செய்த நிலையில், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக்கடைகள், வாடிக்கையாளர் மையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய உள்ளதாக ஏர்டெல் தெரிவித்திருந்ததுஇந்நிலையில் அடுத்ததாக ஜியோ நிறுவனத்துடனும் ஸ்டார்லிங் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தருவதையும் உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்” என தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News