25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வியாழன் கோளில் நகரும் புயல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வியாழன் கோளில் நகரும் புயல்

 சூரியக் குடும்பத்திலேயே மிகப்  பெரிய கோள், வியாழன். அதில் பூமியில் வீசுவது போல பல மடங்கு வேகமாக புயல் வீசுகிறது என்று நமக்கு தெரியும். இந்தப் புயலானது ஒரு சூறாவளியைப் போல ஒரே இடத் தில்  நிலைகொண்டு இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வில் இந்தப் புயலானது நகர்வது தெரியவந்துள்ளது.

நாசாவின் 'ஹப்பிள்' தொலைநோக்கி அனுப்பிய புகைப்படங்கள் வாயிலாக விஞ்ஞானிகள் இதை உறுதி செய்தனர். நாம் சாப்பிடுகின்ற ஜெல்லியை ஒரு கிண்ணத்தில் வைத்து லேசாக ஆட்டினால் எப்படி அதனுடைய மேற்பரப்பு முன்பின்னாக நகருமோ அதுபோல இந்தப் புயலும் அவ்வப்போது நகர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

டிசம்பர் 2023ம் ஆண்டிலிருந்து மார்ச் 2024ம் ஆண்டு வரை 90 நாட்கள் தொடர்ந்து இந்தப் புயலை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இந்தப் புயலின் மையம் லேசாக வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் அவ்வப்போது நகர்வது தெரிய வந்தது. இந்தப் புதிய கண்டு பிடிப்பானது, வியாழன் கோளைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள உதவும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News