25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


வெற்றிப் படிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெற்றிப் படிகள் .

பலருடைய முயற்சிகள் தோல்வியையே தரும். ஆனாலும் தளராமல் விடா முயற்சியுடன் மீண்டும், மீண்டும் உழைப்பவர்களாலேயே வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். ஒரு சிலருக்கு மாத்திரமே ஒரே முயற்சியில் வெற்றியைக் கொடுக்கும்.

விடாமுயற்சியுடன் தன்னுடைய முன்னோர்களுக்காக பல வருடங்கள் தபஸ் செய்ததால் தான் இன்று கங்கை நதி இந்தியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏழ்மையிலேயே பிறந்து, தோல்வியைத் தவிர வேறு எதுவும் கிடைக்காமல் கிட்டத்தட்ட 6 மாதங்கள் நரம்புத் தளர்ச்சியால் படுத்த படுக்கையாகிய, அம் மனிதரைக் கண்டு, பலரும் கதை முடிந்தது அவ்வளவுதான் இனி எங்கே பிழைப்பார்? என்று முடித்து விட்டனர். ஆனாலும் அம்மனிதர் அதிலிருந்து மீண்டெழுந்து அமெரிக்க நாட்டின் தலைவரானார் ஆப்ரஹாம் லிங்கன்.

இதைப் பார்க்கும்பொழுது தோல்வி என்பது அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டு, தளராமல் முயற்சி செய்ய வேண்டும். பல புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம், தோல்வியை சுமுகமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதாகக் கூறுகின்றனர். நம் வீட்டில் எரியும் பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் 98 முறை முயற்சி செய்தார். 99வது தடவை எல்லோருடைய பார்வைக்கும் தன்னுடைய ஆராய்ச்சியை நிரூபிக்க கூட்டம் கூட்டி பல்பை எரிய விட்டாராம். அப்பொழுதும் எரியவில்லையாம். அங்கு வந்த பார்வையாளர்கள் இத்தனை தடவை முயற்சி செய்தும் எரியவில்லையே! இதைக் காண்பிப்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேலி செய்தனராம். ஆனால் எடிசன் இல்லவே இல்லை, 'பல்பு எரியாததற்கு 99 காரணங்களை கண்டு பிடித்துள்ளேன் என்று மிகச் சாதாரணமாக பதிலளித்தாராம்.' அவருடைய அபாரமான விடா முயற்சியினால் இன்று எல்லோருடைய வீடும் பிரகாசமாக இருக்கிறது. அவர் அத்தோல்வியைக் கண்டு துவண்டு போயிருந்தால், நிச்சயம் இன்றைக்கு நம் வீட்டில் சிம்னிலைட் தான்.

இளைய சமுதாயத்தினர் பலர் தோல்வியைக் கண்டு துவண்டு விடுகின்றனர். இது மிகப் பெரிய தவறாகும். அதைப் பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே அக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். 'தோல்வியெல்லாம் சகஜமப்பா', 'இதுக்குப் போயி அலட்டிக்கிறியே' என்று சொல்லி வளர்க்க வேண்டும். அக்குழந்தைகளின் மனதில் ஒருவர் வென்றால் ஒருவர் தோல்வி அடையத்தான் வேண்டும். அடுத்த முறை முயற்சிக்கலாம், என்று விடாமுயற்சியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டால், வெற்றிப் படிகள் மளமள என்று நம்மைத் தேடி வரும் முயன்று பாருங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News