சக்கரை வள்ளி கிழங்கு கட்லெட்
தேவையான பொருட்கள் :
1/4 கிலோ சக்கரை வள்ளி கிழங்கு,1 பெரிய வெங்காயம்,
1 டீஸ்பூன் உப்பு,1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1டீஸ்பூன் மட்டன் மசாலா,
200 மிலி எண்ணெய் ,2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர், 1 டீஸ்பூன் சீரகத்தூள்
செய்முறை:சக்கரை வள்ளிகிழங்கை தண்ணீரில் கழுவி அதை நறுக்கி இட்லி தட்டில் போட்டு அதன் மேல் சிறிதளவு உப்பு தூவி இட்லி கொப்பரை 15 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
வெந்த சக்கரை வள்ளி கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும் .அதனுடன் உப்பு ,மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகத்தூள், மட்டன் மசாலா, கான்பிளவர், சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்த மாவை உருண்டை பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கட்லெட்டை பொரிக்கவும் .மறுபக்கம் திருப்பிப் போட்டு மீண்டும் பொறிக்கவும். சக்கரை வள்ளி கிழங்கு கட்லெட் தயார் .
0
Leave a Reply