தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ (TNPSC Group-II / II A) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ(TNPSC Group-II / II A) தேர்விற்கான அறிவிக்கை 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் 821 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.09.2026 ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித்தேர்வில் சிறப்பாகத் தயாராகி வெற்றி பெறும் வகையில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் 20.08.2026 வியாழக்கிழமை முதல், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். மேலும், தேர்வர்களின் தொடர் தயாரிப்பிற்கு உதவும் வகையில் இலவச வை-பை (Wi-Fi) வசதியுடன் கூடிய நூலகம் மற்றும் கணினி வசதிகள் அலுவலகத்தில் உள்ளன. பயிற்சியின் ஒரு பகுதியாக இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வர்களின் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுகி தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2அ (TNPSC Group-II / II A) தேர்விற்குத் தயாராகும் விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply