25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (08.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் திரு.வ.சம்பத்,I A S., அவர்கள்  தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராம பொருள்கள் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கதர் வாரியத்தில் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் மற்றும் பனை சார்ந்த பொருட்கள் விற்பனையை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக திருவில்லிபுத்தூர் மாரியம்மன் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், எழுது பொருள் மற்றும் அச்சு தொழிற் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மண்டல துணை இயக்குநர்(கதர் கிராமத் தொழில்கள்) திருமதி சே.பாரதி, உதவி இயக்குநர்(மதுரை, கதர் கிராம தொழில்கள்) திரு.எபனேசர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News