25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


டெப்லிம்பிக்சில்' தங்கம் வென்ற இந்திய ஜோடி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டெப்லிம்பிக்சில்' தங்கம் வென்ற இந்திய ஜோடி !

காது கேளாதோருக்கான 'டெப் லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர்.

 10 மீ., 'ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணி,தங்கப் பதக்கத்துக்கான  போட்டியில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 23, மஹித் சாந்து 21, ஜோடி, தென் கொரி யாவின் ஜியான் டெய்ன்,கிம்ஊரிம் ஜோடியை சந்தித்தது.துவக்கத்தில் முன்னிலை 4-0 என பெற்ற இந்திய ஜோடி, முடிவில் 17-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.

 தனுஷ் டோக்கியோ 'டெப்லிம் பிக்சில்' வென்ற இரண்டாவது தங்கம். முன்னதாக இவர், தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தவிர - பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற மஹித் சாந்துவுக்கு இது முதல் தங்கம் ஆனது.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் இந்தியாவின் முர்டசா வானியா, கோமல் மிலிந்த் ஜோடி, 16-12 என உக்ரைனின் லைகோவா, ஒலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.

இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்றுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News