கறிவேப்பிலை காயாமல் இருக்க...
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில்போட்டுவைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேகவைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும்.வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.
பூண்டை அவ்வப்போது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும்.
பலகாரம் செய்த பிறகு மீதமாகும் எண்ணெய்யில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.
0
Leave a Reply