25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வியட்நாம் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா, பிரனாய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வியட்நாம் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா, பிரனாய்.

வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, ரக்ஷிதா ஸ்ரீ, இஷாராணி, பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர்.

வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் தான்வி சர்மா, மாளவிகா பன்சோத் மோதினர். இதில் தான்வி சர்மா 21-18, 15-21, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை மான்சி சிங்கை வீழ்த்தினார்.

இந்தியாவின் இஷாராணி, 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் ஹுவாங் சிங் பிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், சக வீரர் சான்ஸ்கர் சரஸ்வத்தை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 28-26, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News