உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடரில்பவினா படேல் தங்கம் வென்றார்.
மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர்போலந்தில் ,பெண்கள் ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் ,டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா படேல் 39, தென் கொரியாவின் ஜங்யங்கை காலிறுதியில்,3-1 (8-11, 11-7, 11-6, 11-9) என வென்றார்.
அடுத்து நடந்த அரையிறுதியில் தென் கொரியாவின் மூன் சங்யேவை சந்தித்தார். இதில் பவினா 3-1 என (11-8, 11-7, 8-11, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
பைனலில் பவினா, பிரான்சின் புளோரா வாட்டியரை எதிர்கொண்டார். பவினா முதல் செட்டில் 11-6 , அடுத்த செட்டில் 11-5 என கைப்பற்றி, மூன்றாவது செட்டை 11-9 என வென்றார். முடிவில் 3-0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
0
Leave a Reply