வன உயிரின வார விழா- 2025 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.10.2025) தமிழ்நாடு வனத்துறை மூலம் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வன உயிரின வார விழா- 2025 நிறைவு நிகழ்ச்சி துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை உள்ள நாட்கள் வன உயிரின வாரவிழாவாக வனத்துறையினரால் அனுசரிக்கப்படுகிறது. வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைவதே இதன் நோக்கமாகும்.
விருதுநகர் மாவட்ட வனத்துறையில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்(திருவில்லிபுத்தூர் கோட்டம்), சமூக காடுகள் கோட்டம் விருதுநகர், வனவியல் விரிவாக்க கோட்டம் விருதுநகர் (இ) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் RF/RL பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் வனஉயிரினப் பாதுகாப்பு பிரதான பணியாக உள்ளது. சமூக காடுகள் கோட்டம் மற்றும் வனவியல் விரிவாக்க கோட்டம் ஆகியவை சாலைகள், அரசு நிலங்கள், தனியார் நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தலை பிரதானமாக கொண்டு செயல்படுகிறது.திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பல அரிய வகை வரையாடு, மான், வனஉயிரினங்கள் உள்ளன. சிறுத்தை, புலிகள், காட்டுமாடு, சாம்பல்நிற அணில்கள், கரடி, யானைகள், மிளா போன்ற வனஉயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தவும் வனத்துறை பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநாடுகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பள்ளி கல்லூரிகளில் வனவிலங்குகள் குறித்த கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி வினா உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வன உயிரின் வார விழாவின் தொடக்கமாக அக்டோபர் 2 ஆம் தேதி அய்யனார் கோவில் மலைவாழ் குடியிருப்பு மக்களிடம் வனங்கள்பற்றியவிழிப்புணர்வுதுணைஇயக்குநர்(திருவில்லிபுத்தூர்மேகமலைபுலிகள்காப்பகம்)அவர்களால்எடுத்துரைக்கப்பட்டது.அதனையடுத்து அக்டோபர் 3 ஆம் தேதி கிழவன்கோவில் கிராமத்தில் தொடங்கி கோவிலார் வரையில் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களால் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 5 ஆம் தேதி செண்பகத்தோப்பில் உள்ள புத்தாக்க பயிற்சி மையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அணில்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் அக்கல்லூரி மாணவர்களுக்கு வனஉயிரினங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் உயிரனையாக்கம் (Bio-Mimicry) கருத்தரங்கு நடத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 7 ஆம் தேதி பாப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோபாலபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜீ சின்மயா வித்யாலயா பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.அதன்படி, வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், உதவி வன பாதுகாவலர், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply