25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகள்.

நம் குழந்தைகளைத் தான்,  கோடை விடுமுறையைத்தாண்டி குதூகலமாக தன்னுடைய சிநேகிதிகளையும், நண்பர்களையும் பார்க்கப் போகிறோமே! அது தான்.

மாமா வாங்கிக் கொடுத்த புது பேக், அப்பா வாங்கிக்கொடுத்த புது யூனிபார்ம், ஸ்கேல், ரப்பர் ,பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், க்ரேயான் கலர், அம்மா வாங்கிய டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், புது ஷீ, இவற்றையெல்லாம் காண்பித்து சந்தோஷப் படத்தான் இவ்வளவு பறக்கின்றனர்.

புது வகுப்புகள் செல்லும் பொழுது அளவிட முடியாத மகிழ்ச்சி. லீவு நாட்களில் சென்ற சுற்றுலா,  சினிமா, அத்தை, மாமா  வீட்டைப்பற்றிய விமர்சனம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

புது வகுப்பில் பெயிலான குழந்தைகளைப் பார்க்க பாவமாக இருக்கும், பெயிலான குழந்தையும் வெட்கத்தில் கூனிக் குறுகி  தலைகுனிந்து இருப்பார்கள். 

அவர்களைப் பார்த்து 'கவலைப்படாதே' 'நாங்கெல்லாம் உங்களுடைய பிரண்ட்ஸ்.' இந்த வருஷம் நல்லா படிக்கலாம் என்ன? என்று ஆறுதல் சொல்லிக் கொள்வார்கள்.

புது டீச்சரைப் பார்த்து குழந்தைகள் சந்தோஷப்படுவார்கள். எனக்கு Maths டீச்சர், எனக்கு English - டீச்சர், தமிழ் டீச்சர் பிடிக்கும் என்று ஆளாளுக்கு -சந்தோஷப் பட்டுக் கொள்வார்கள்.

முதன் முதலாக தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் இளம் தம்பதியரின் கண் நிறைய  சந்தோஷத்தையும், புது இடம் கண்டு மிரண்ட கண்களுக்கிடையே தம்வயதையுடைய சின்னக்குழந்தைகள் நிரம்பி இருப்பதைப் பார்த்து ஒரு பிரகாசமுமாக  பல விதக் காட்சிகளை நாம் காண்கிறோம்.

ஸ்கூல் பியூனிலிருந்து, ஆயாவிலிருந்து குசலம் விசாரித்து மதியச் சாப்பாட்டைபகிர்ந்து கொண்டு ஆனந்தமாகத் துவங்கும் பள்ளியில் வருடம் முழுவதும் நிலையானசந்தோஷம்பெற ராஜபாளையம் டைம்ஸ் சிறகடித்து பறக்கும் பட்டாம் பூச்சிகளை (குழந்தைகளை) வாழ்த்துகின்றது.

 

பள்ளி நிர்வாகத்திற்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பாதுகாப்பு கருதி சின்ன டிப்ஸ் --

குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. தாய், தந்தை அல்லாத  வேற்று மனிதர்கள் என்னதான்பழகிஇருந்தாலும்,அவர்களைநம்பிகுழந்தைகளை  விடாதீர்கள்.உங்களுக்கு   முடியாதகாரணத்தில்,பள்ளி  நிர்வாகமேபாதுகாப்புகருதி,அக்குழந்தைகளை  பெற்றோருடன்  பத்திரமாக ஒப்படைப்பது  மிக மிகமுக்கியம். அருகில்உள்ள கடைகளில் மிட்டாய், பிஸ்கட்  வாங்கிச் சாப்பிடுவதை பள்ளி நிர்வாகமே கண்டிப்பாக தவிர்க்கும்  படி சொல்வது நல்லது. குழந்தைகளிடம் அதிகமாக காசு கெடுக்காதீர்கள்.வீட்டில். நாமே தயார் செய்ததை கொடுப்பது  மிகவும் நல்லது, பாதுகாப்பானது.

திருமதி. குணா பாஸ்கர் ராஜா

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News