25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெற www.dncwb.tn.gov.in என்ற இணையதளம்  மூலம்   விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெற www.dncwb.tn.gov.in என்ற இணையதளம்  மூலம்   விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் .

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

1.      விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை

2.    இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை

3.    ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை

4.    கல்வி உதவித்தொகை

5.    திருமண உதவித்தொகை

6.    மகப்பேறு உதவித்தொகை

7.    மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்

8.    முதியோர் ஓய்வூதியம்

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச்  சார்ந்தவர்கள்  2) 18 வயது முதல் 60 வயது  நிறைவு பெறாதவர்கள்  3) அமைப்பு  சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட  உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.

           மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.dncwb.tn.gov.in என்ற இணையதளம்  மூலம்   விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 வது மாடியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News