25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பனையூர் ஊராட்சியில் விபி-ஜி-ராம் ஜி (VB-G RAM G- Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission Gramin) அறிமுகக் கூட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பனையூர் ஊராட்சியில் விபி-ஜி-ராம் ஜி (VB-G RAM G- Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission Gramin) அறிமுகக் கூட்டம்.

'வளர்ச்சி அடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்' மாவட்டம் முழுவதும் தொடங்குவதை முன்னிட்டு, திட்டப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான அறிமுக மற்றும் விளக்கக்கூட்டம்  (02.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக, தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களுடன் இந்த 'விபி-ஜி ராம் ஜி' திட்டம் ஜூலை 1, 2026 முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.  மக்களுக்கு நேரடியாக வாழ்வாதார உத்தரவாதம் வழங்கும் இந்த விபி-ஜி ராம் ஜி திட்டத்தை அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாளர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். பழைய திட்டத்தை விட இதில் வேலை நாட்களும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியான பணியினைத் தேர்வு செய்து கிராமப்புறக் குடும்பங்களுக்கு பணி வழங்கப்படும்.

  இத்திட்டமானது, கணினிப் பதிவேற்றம் முதல் களப்பணிகள் வரை அனைத்திலும் துல்லியத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இருக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டிற்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.  தினசரி குறைந்தபட்ச ஊதியமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், விவசாய பருவ காலம் தவிர்த்து மற்ற காலங்களில் பணிகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், நீர் பாதுகாப்பு, ஏரிகள் தூர்வாருதல், கிராமப்புறச் சாலைகள் மற்றும் வாழ்வாதார உள்கட்டமைப்புகள் போன்ற பணிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தரமாகவும், கிராமத்திற்குப் பயனுள்ள நிரந்தரச் சொத்தாகவும் மாறுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, இந்த திட்டத்தை அனைவரும் இணைந்து நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திட்ட களப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News