விளையாட்டு போட்டிகள் – முக்கிய அப்டேட்கள்
இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் வெலிங்டனில் நவம்பர் 19 முதல் 23ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய ‘ஏ’ அணி, அதிகாரப்பூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா நான்கு நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்குகிறது.
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தருண், தனது சக வீரர் மஞ்சுநாத்தை 21-15, 21-14 என்ற நேர் கேம் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் நேற்று தொடங்கியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 25வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா, தென் கொரியாவின் கிம் கா யுனிடம் 10-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
0
Leave a Reply