25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் - பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகள் ஆய்வு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் - பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகள் ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, பந்தல்குடியில் (18.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த நான்கு முக்கியக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் (Flying Squads) வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 63 நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டு, அவற்றில் 441 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், வீடியோ பதிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோகண்காணிப்புக்குழுக்கள்(VideoSurveillanceTeams)அமைக்கப்பட்டு,இதில்மொத்தம்21நபர்கள்இடம்பெற்றுள்ளனர்.இக்குழுக்கள் பதிவு செய்யும் காட்சிகளை ஆய்வு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோ பார்வையிடல் குழுக்கள் (Video Viewing Teams) அமைக்கப்பட்டு, அதில் 14 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, பந்தல்குடியில் இன்று (18.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கோ, நோயாளிகளுக்கோ அல்லது அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோருக்கோ தேவையற்ற சிரமங்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நியாயமாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கண்காணிப்புக் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News