25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


பசியின்மையைச் சரிசெய்யும் சுக்கு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பசியின்மையைச் சரிசெய்யும் சுக்கு.

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இவை தீவிரமாகாமல் தடுக்கவும், அறிகுறியை கட்டுப்படுத்தவும் பாரம்பரியமாகவே சில மூலிகைகள் உள்ளது. சுக்கு மழைக்காலத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய மூலிகை என்று சொல்லலாம்.

இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படுவதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உ றைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.செரிமானம் பிரச்னை உள்ளவர்கள்அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை  ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News