முதன் முறையாக ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா.
17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை , சீனாவின் சுஜு நகரில், 10வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
'டாப்-6' இடம் பெறும் அணிகள், தொடரின் முடிவில், வரும் அக். 17-நவ.7ல் மொராக்கோவில் நடக்க உள்ள 17 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்தில், பங்கேற்க தகுதி பெறும்.
முதன் முறையாக 21 ஆண்டில், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி 'பி' பிரிவில், இடம் பெற்றது.
தனது மூன்றாவது, கடைசி போட்டியில்நேற்று லெபனானை சந்தித்தது.
முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 21 ஆண்டு ஆசிய கோப்பை (17 வயது) அரங்கில், இந்தியா பெற்ற முதல் வெற்றி.
0
Leave a Reply