25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா 'ஏ' அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா 'ஏ' அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை 'ஏ' அணியை எதிர்கொண்டது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், காலேவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி ஆதிக்கம் செலுத்தியது.

முதல் இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 366 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த இந்தியா 'ஏ' அணி 9 விக்கெட் இழப்புக்கு 543 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

2-வது இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 209 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் ஆஷேன் பண்டாரா 87 ரன்கள் எடுத்தார். இந்தியா 'ஏ' அணியின் குர்னூர் பிரார் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

வெற்றிக்கு 33 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் (25*), அமன் மொகதே (11*) ஆகியோர் சிறப்பாக விளையாட, இந்தியா 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரையும் இந்தியா 'ஏ' அணி கைப்பற்றியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News