25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


2021 முதல் 2024-ஆம் ஆண்டுக்கான  தொழில் நல்லுறவு விருதிற்கு தகுதியான நபர்கள்  விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2021 முதல் 2024-ஆம் ஆண்டுக்கான தொழில் நல்லுறவு விருதிற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை தொழிலாளர் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களிடையே தொழில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் “தொழில் நல்லுறவை பேணிப்பாதுகாக்கும் பணியில்” சிறந்து விளங்கும் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கும் வகையில் “தொழில் நல்லுறவு பரிசுத் திட்டம்”  என்ற திட்டத்தை 1975-ஆம் ஆண்டு துவங்கி நாளது தேதி வரை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு கேடயம், பரிசுத் தொகை மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப் பெற்ற முத்தரப்புக்குழு பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்.இத்தொழில் நல்லுறவு விருதுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.04.2026 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம்   31.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

               இவ்விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் (http://www.labour.tn.gov.in/gira) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இவ்விண்ணப்பங்களை நேரடியாக திருநெல்வேலி பெருமாள்புரம் போஸ்ட் திருமால்நகர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகத்தில்  பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் நுழைவுக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100-ம் வேலையளிப்பவரானால் ரூ.250-ம்  “செயலாளர் (தொழிலாளர் தனி இணை ஆணையர் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்) தொழில் நல்லுறவு பரிசுக்குழு அண்ணாநகர் சென்னை-40” (The Secretary, (Special Joint Commissioner of Labour, Office of the Commissioner of Labour) Good Industrial Relations Award Committee, Anna nagar, Chennai-40) என்ற பெயருக்கு கணக்குத் தலைப்பு (“0230-00 00 Labour and Employment 800 other Receipts- 227 Non Taxation fees – 99 others –AG Receipt of Labour Department (DP code No. 0230 00 800 AG 22799)”)ன் கீழ் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் தொகை செலுத்திய அசல் செலுத்துச்சீட்டு (Challan) வைத்து அனுப்ப வேண்டும்.

 அல்லது  விண்ணப்பத்துடன் நுழைவுக் கட்டணமக தொழிற்சங்கத்திற்கு ரூ.100-ம் வேலையளிப்பவருக்கு ரூ.250-ம் “நிர்வாக அலுவலர் (குறைந்தபட்ச ஊதியம்) தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சென்னை” என்ற பெயரில் செலுத்திய வரைவோலையை (Demand Draft) வைத்து அனுப்ப வேண்டும்         மேலும் விவரங்களுக்கு 044-24320887 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளளாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர், மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News