25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பன்னீர் புதினா புலவு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பன்னீர் புதினா புலவு

தேவையான பொருட்கள்-1டம்ளர் சீரகசம்பா அரிசி,1 பாக்கெட் பன்னீர்,1 கப் பச்சை பட்டாணி,1பெரிய வெங்காயம்,1 கப் புதினா இலை,1 பச்சை மிளகாய்,1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1ஸ்பூன் தனி மிளகாய் தூள்,1ஸ்பூன் தனியா தூள், 1சிறியஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1 துண்டு பட்டை, 2 கிராம்பு,1 பிரிஞ்சி இலை, 4 ஸ்பூன் நெய், 2ஸ்பூன் ஆயில்

செய்முறை  - சீரக சம்பா அரிசியை இருமுறை கழுவி தேவையான நீர் விட்டு10 நிமிடம் ஊறவிடவும். ஒரு பெரிய வெங்காயம் ஒரு பச்சை மிளகாய்நீளவாக்கில் நறுக்கவும். பனீரை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கவும்.இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும். பச்சை பட்டாணி ஒரு கப் எடுத்து வைக்கவும்.

குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி ஒரு கப் புதினா தழை சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய பனீர் சேர்த்து தேவையான உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள்சேர்த்து கலந்து விடவும்.தேவையான நீர் விட்டு ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கலந்து குக்கரை மூடி போட்டு சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.சுவையான பன்னீர் புதினா புலவு தயார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News