25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பன்னீர் ரோஜாவில் உள்ள மருத்துவ குணங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பன்னீர் ரோஜாவில் உள்ள மருத்துவ குணங்கள்

பன்னீர் ரோஜா  இந்திய மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. 

பன்னீர் ரோஜா மலச்சிக்கலை தீர்க்கிறது. இதன் மொட்டுகளை அரைத்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

 பன்னீர் ரோஜா அஜீரணத்தைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. பன்னீர் ரோஜா சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் சூட்டை குறைக்க முடியும்.

 பன்னீர் ரோஜாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இளமையை  இருக்க உதவியாக இருக்கும்.

 பன்னீர் ரோஜா சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மை அளிக்கிறது. இதன் பூக்களை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக மாறும்.

பன்னீர் ரோஜாவில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும். 

சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம்.20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News