25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


ரிசர்வ் வங்கி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரிசர்வ் வங்கி.

அரசின் கருவூலமாக விளங்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மத்திய வங்கி மட்டுமின்றி ,இந்தியாவின் நாணயத்தை யும்,ரூபாய் நோட்டுகளையும் வெளியிடுகிறது. இந்த வங்கிதான் நாட்டின் பல பொருளாதார நட வடிக்கைகளை இயக்கி வருகிறது. பொதுமக்கள் மற்ற வங்கிகளைப் பயன் படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமையின் கீழ் செயலாற்ற பல வங்கிகளை அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கியாக செயல்படுகிறது. ரிசர்வ் வங்கியைப்பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு கண்காணித்தும் வருகிறது

. ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே நாட்டின் பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டு முதல், மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழு வதும் பல வட்டாரக் கிளைகள் உள்ளன. முதலில் தனியாரால் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, 1949-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News