25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை  TEJAS (Transforming Entrepreneurial Journeys and Accelerating Startups)மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை TEJAS (Transforming Entrepreneurial Journeys and Accelerating Startups)மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய அரசின் Startup India (DPIIT), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை TEJAS (Transforming Entrepreneurial Journeys and Accelerating Startups) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (09.07.2026) தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சி பட்டறையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு ஸ்டார்ட்அப் திட்டங்கள், நிதி உதவிகள், இன்குபேஷன் வசதிகள், முதலீட்டு இணைப்புகள், அறிவுசார் சொத்துரிமை, சந்தை அணுகல் மற்றும் ஸ்டார்ட் அப் பதிவு தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

 இந்நிகழ்ச்சியில் இன்குபேஷன் மையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தொழில்முனைவோருக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில், வட்டார இன்குபேஷன் கிளஸ்டரினை (Regional Incubation Cluster) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களின் திறன்களை மேம்படுத்தி, புதுமை, தொழில்முனைவு மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விருதுநகர் பெண்மை (Virudhunagar PenmAI 2026) என்னும் தொழில்நுட்பம் சார்ந்த பதாகை வெளியிடப்பட்டது.ஸ்டார்ட்அப் இந்தியா என்பது, இந்தியாவில் புதுமையான தொழில்முனைவோரை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், தொடங்கப்பட்ட முயற்சியாகும்.

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முன்னேற விழையும் மாவட்டங்களில் ஒன்றாகும். எனவே, மாவட்ட நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவோர், மருத்துவ நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மாணவர்கள்கள் ஆகியோர் ஒன்றிணைந்து உள்ளூர் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பாக இது அமைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்டத்தின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் தொழில்முனைவு மற்றும் புத்தாக்க சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்முனைவு வழிகாட்டுதல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, கடந்த ஆண்டில் 3 ஆக இருந்த இன்குபேஷன் மையங்கள் தற்போது 8 பதிவு செய்யப்பட்ட இன்குபேஷன் மையங்களாக உயர்ந்துள்ளன. மேலும், 4 இன்குபேஷன் மையங்களுக்கு StartupTN மூலம் மொத்தம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு, தொழில்முனைவோருக்கு தரமான வழிகாட்டல் மற்றும் ஆதரவு வழங்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 149 DPIIT அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், உணவுப் பதப்படுத்தல், பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றன.

மாவட்டத்தில் ஏற்கனவே ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN) மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுடன் இணைந்து கடந்த ஆண்டு, தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அழைத்து "விருதுநகர் முதலீட்டாளர்கள் கூட்டம் 2025(Virudhunagar Investor Meet 2025)" நடத்தப்பட்டது. இதன் மூலம் முன்னணி தொழில்முனைவோர்கள் மூலம் புதிய தொழில்முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே புதுமை சிந்தனைகளை ஊக்குவித்து, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய பலமாக பட்டாசு தொழில் விளங்குகிறது. குறிப்பாக சிவகாசி பட்டாசு தொழில் ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வருவாயை ஈட்டுவதோடு, சுமார் 1.5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இது மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இரசாயன கலவைப் பணிகளின் போது ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளன.எனவே, கல்லூரிகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து இரசாயன கலவை மற்றும் ஆபத்தான தொழிற்சாலை பணிகளை தானியக்கப்படுத்தும் அல்லது தரநிலைப்படுத்தும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

  விருதுநகர் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய சவால் நீர் வள மேலாண்மை ஆகும். குறைந்த மழைப்பொழிவு காரணமாக மாவட்டம் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. மேலும், சீமைக் கருவேல மரங்கள் பரவலாக வளர்ந்து நிலத்தடி நீர் வளங்களையும், விவசாயத்தையும் பாதிக்கின்றன. சீமைக் கருவேலத்தை அகற்றுவதற்கோ அல்லது பயனுள்ள பொருளாக மாற்றுவதற்கோ தொழில்நுட்பத் தீர்வுகள் உருவாக்கப்பட்டால், அது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, பிரதமரின் “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” இலக்கை அடையவும் உதவும்.

மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான திசை திட்டத்தின் கீழ் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பதன் மூலம் குழந்தைத் திருமணம், பதின்பருவ கர்ப்பம், இரத்தச்சோகை, குழந்தை இறப்பு விகிதம் (IMR), தாய் இறப்பு விகிதம் (MMR) போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அரசு பள்ளிகளில் பயிலும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, நீட் (NEET), க்யூட் (CUET) மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கி உயர்கல்விக்கு வழிகாட்டப்படுகிறன.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 5 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.அவற்றில் இராஜபாளையத்தில் இரண்டு குடியிருப்புகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் மூன்று குடியிருப்புகளும் அமைந்துள்ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு வன விளைபொருட்கள் கிடைக்கின்றன. சதுரகிரி மலைப்பகுதி பழங்குடியின மக்கள் தயாரிக்கும் தேயிலைப் பொருட்களை பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் “உயிர் டிப் டீ” என்ற பெயரில் சந்தைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.இந்த தயாரிப்புகளை டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

          உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்தால், இத்தகைய திட்டங்கள் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உங்களுக்குத் தேவையான அனைத்து வகையான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு தளத்தையும் (Platform) வழங்க தயாராக உள்ளன. உங்களிடம் உள்ள திறமைகள், புதுமையான யோசனைகள் மற்றும் வளங்களை பயன்படுத்தி, அவற்றை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு ஆதரவையும் வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் StartupTN உதவி இணைத்தலைவர் திரு.பிரேம் குமார், துணைத்தலைவர் திரு.சிவக்குமார், அசோசியேட் (Associate) Startup India திரு.ரோஹன் சச்தேவா, ஆலோசகர்(Startup India) திரு.விஷால் கர்க், வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு.சக்திவேல், கல்வி நிறுவனங்கள், தொழில்துறை பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், இன்குபேஷன் மையங்கள், அரசு அலுவலர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News