தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு .
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.02.2026) சட்டமன்றத்தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் மண்டல காவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், வாக்குச்சாவடி பணிகள், தேர்தல் தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு முடிவுற்றதும் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் பணிகளில் உள்ள முக்கியமான படிவங்கள் மற்றும் சான்றிதழ்களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S ., அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply